"மெட்ராஸின் குடிதண்ணீர் பகிர்மானம்"
வளர்ந்த கதை பற்றி எழுத வேண்டும் எனில்
சென்னை அதாவது மெட்ராஸ் பட்டினத்தின் பிறப்பு மற்றும் வளர்ந்த கதை சொல்லாமல் எழுத முடியாது .
கிழக்கிந்திய கும்பினியர் முதன்மையான துணி மற்றும் ஏனைய ஏற்றுமதி வியாபார விரிவாக்கத்திற்காக கோரமண்டலம் கடல் பகுதியின் மசுலிபட்டினதிலிருந்து தெற்கு நோக்கி ஆந்திரா அருகே அர்மாகன் (ARMAGAON) எனும் சிறிய இடத்தில் (தற்பொழுது பழவேற்காடு தாண்டி உள்ளது ) தங்களது துணி வியாபாரம் மற்றும் கிட்டங்கிகளை அமைத்து தங்கள் மேலை நாடுகள் மற்றும் ஐய்ரோபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிகு செல்வம் ஈட்டி வந்தனர் .
மேலும் செல்வம் மற்றும் லாபம் சம்பாதிக்க ஆசை கொண்டு இது தவிரவும் தென் கீழ் உள்ள பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள பாண்டிச்சேரிக்கு அருகாமையில் ஏதேனும் பிரெஞ்சினரின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கடற் கரை ஊர் வாங்கி பிரெஞ்சினரின் ஆதிக்கத்திற்கு பதிலடியும் எதிரான செயல் புரிய ஆங்கிலேய கும்பினியர் தொடர்ந்து முயற்சி செய்தனர் .
அந்த காலங்களில் மெட்ராஸ் கிராமத்தின் (கடல் குப்பத்தின்) வசிப்பிடமெட்ராஸின் நமது முது மக்கள் ஊருணி மற்றும் நீர் நிலை கிணறுகளில் உள்ள நீர் கொண்டு தங்களின் வாழ்க்கை நீர் தேவையினை அனுபவித்தனர் .
கும்பினியர்கள் தங்களின் நீர் தேவைக்கென கப்பல் மூலம் நீர் தருவித்தும் மற்றும் மெட்ராஸ் மக்களின் நீராதாரங்களையும் பயன் படுத்தினர் .
பரந்த கிழக்கு எல்லையினை வங்காள கடற்கரையாக கொண்ட மட்ராஸ் பட்டினத்தின் நீர் தேவை நெசவு தொழில் மற்றும் வாழ் சார் தொழில்கள் கருதி நகரில் குடி பெயர்ந்த மக்களின் தேவை அதிகரித்தது .
மக்கள் பெருக்கத்தினால் மெட்ராஸில் நீர் தேவை பயன்அதிகரித்த போது - உடல் நலம் கருதியும் - ஆங்கிலேய கும்பினியர் ஓரு புதிய நீர் ஆதாரத்தினை கண்டு பிடித்து தங்களது செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியான வெள்ளையர் டவுனுக்கு செயல் படுத்த முற்பட்டனர்.
1776 ம் ஆண்டில் கறுப்பர் டவுனுக்கு வட மேற்கு பகுதியில் உள்ள பெத்த நாயக்கன் பேட்டையில் ஓன்றினைத்த பத்து கிணறுகளை தோண்டி ஒரு சுரங்க நீரடி சுரப்பு ஊற்றமைப்பினை-(INFILTRATION GALLERY) - நீர் கிணறு களை கேப்டன் பேகர் எனும் கும்பினி பொறியாளர் அமைத்தார் .
அவற்றில் மூன்றுகிணறுகள் செயல்ஆக்கதின்போது தக்க நீர் சுரப்பினை வழங்காமையால்
ஏழு கிணறுகளை பயனுக்கு வைத்து நீரினை இரும்பு குழாய்கள் மூலம் கும்பினியர்கள்
வாழும் வெள்ளை பட்டினத்தின் பயனுக்கு PICCOTHA எனும் ஏற்றங்கள் மூலம் நீர் இறைத்து தண்ணீர் வசதி பெற்றனர்.
தாங்கள் ஆரோக்கியமாக பெறும் நீர் வசதி யினை மூன்றில் இரண்டு பகுதி வெள்ளை பட்டினத்திற்கும் எஞ்சிய ஒரு பகுதியினை சுதேச மக்களுக்கும் வழங்கினர்.
அன்றைய மதரசா பட்டினத்தின் ஏழு கிணறுகள் இன்றும் சென்னையில் வள்ளலார் நகர் பஸ் நிலையம் அருகே மின்ட் ஸ்ட்ரீட் ல் உள்ளது.
பொறியாளர் கேப்டன் பேகர் நினைவாக அவரது பேரினை மெட்ராஸ் முனிசிபல் கார்போரசன்மெட்ராஸ்உயர் நீதி மன்றம் அருகில் பிரட்வே பகுதியில் ராமகிருஷ்ண ஸ்வீட் கடை பக்கத்தில் ஒரு தெருவுக்கு வைத்துள்ளனர்.
நீரின்றி அமையாது உலகு எனும் வாக்கினில் இயற்கை நியதி படி உலக மக்களின் - மெட்ராஸ பட்டின -சென்னை மக்களின் - தடையற்ற இயக்கத்திற்கு நீர் சேவையினை வழங்கும் குடி நீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் உன்னத பணி புரிந்தவர்களுக்கும் /பணியாளர்களுக்கும் /பணி புரிய வர உள்ளவர்களுக்கும் இந்த மெட்ராஸ பட்டினத்தின் நீர் வழங்கல் பற்றிய பதிவுகளை எழுதுகிறேன்.
மாமழை போற்றுதும் , மாமழை போற்றுதும்
என வான் சிறப்பினை போற்றி உழைப்பவர்களுக்கு
சமர்ப்பணம் .
ஏழு கிணறு பற்றிய ஆதாரம் :
WWW . GOOGLE . COM / புக் தேடல் -
the ways and works in india
நன்றி : புகை படங்கள் உதவி : கூகுள் கடவுளின் வலை பக்கங்கள்





good meenakshi keep writing.. it can be an interesting book later
ReplyDelete