Wednesday, April 14, 2010

" சென்னையின் குடிதண்ணீர் பகிர்மானம்"


"மெட்ராஸின்   குடிதண்ணீர் பகிர்மானம்"
                           
                       வளர்ந்த கதை பற்றி எழுத வேண்டும் எனில்



சென்னை அதாவது மெட்ராஸ் பட்டினத்தின் பிறப்பு மற்றும் வளர்ந்த கதை சொல்லாமல் எழுத முடியாது .




                 கிழக்கிந்திய கும்பினியர் முதன்மையான துணி மற்றும் ஏனைய ஏற்றுமதி வியாபார விரிவாக்கத்திற்காக கோரமண்டலம் கடல் பகுதியின் மசுலிபட்டினதிலிருந்து தெற்கு நோக்கி ஆந்திரா அருகே அர்மாகன் (ARMAGAON) எனும் சிறிய இடத்தில் (தற்பொழுது பழவேற்காடு தாண்டி உள்ளது ) தங்களது துணி வியாபாரம் மற்றும் கிட்டங்கிகளை அமைத்து தங்கள் மேலை நாடுகள் மற்றும் ஐய்ரோபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிகு செல்வம் ஈட்டி வந்தனர் .
                             
                    மேலும் செல்வம் மற்றும் லாபம் சம்பாதிக்க ஆசை கொண்டு இது தவிரவும் தென் கீழ் உள்ள பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள பாண்டிச்சேரிக்கு அருகாமையில் ஏதேனும் பிரெஞ்சினரின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கடற் கரை ஊர் வாங்கி பிரெஞ்சினரின் ஆதிக்கத்திற்கு பதிலடியும் எதிரான செயல் புரிய ஆங்கிலேய கும்பினியர் தொடர்ந்து முயற்சி செய்தனர் .

                                                                                                
1639 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ம் தினத்தன்று தமரலவெங்கடாத்ரி எனும் வணிகரிடமிருந்து கிழக்கிந்திய கும்பினி கம்பெனியாரின் முகவன் பிரான்சிஸ் டே வணிகம் கருதி கீழே படத்தில் காட்ட பட்டுள்ள பகுதிகளை குடகூலி உபயோகத்திற்காக (LEASE) வாங்கினர.

  
                                   அந்த காலங்களில் மெட்ராஸ் கிராமத்தின் (கடல் குப்பத்தின்) வசிப்பிடமெட்ராஸின் நமது முது மக்கள் ஊருணி மற்றும் நீர் நிலை கிணறுகளில் உள்ள நீர் கொண்டு தங்களின் வாழ்க்கை நீர் தேவையினை அனுபவித்தனர் .
                                 கும்பினியர்கள் தங்களின் நீர் தேவைக்கென கப்பல் மூலம் நீர் தருவித்தும் மற்றும் மெட்ராஸ் மக்களின் நீராதாரங்களையும்  பயன் படுத்தினர் .
                                பரந்த கிழக்கு எல்லையினை வங்காள கடற்கரையாக கொண்ட மட்ராஸ் பட்டினத்தின் நீர் தேவை நெசவு தொழில் மற்றும் வாழ் சார் தொழில்கள் கருதி நகரில் குடி பெயர்ந்த மக்களின் தேவை அதிகரித்தது .

                                    மக்கள் பெருக்கத்தினால் மெட்ராஸில் நீர் தேவை பயன்அதிகரித்த போது - உடல் நலம் கருதியும் - ஆங்கிலேய கும்பினியர் ஓரு புதிய நீர் ஆதாரத்தினை கண்டு பிடித்து தங்களது செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியான வெள்ளையர் டவுனுக்கு  செயல் படுத்த முற்பட்டனர்.  


 1776 ம் ஆண்டில் கறுப்பர்  டவுனுக்கு வட மேற்கு பகுதியில் உள்ள பெத்த நாயக்கன் பேட்டையில் ஓன்றினைத்த   பத்து கிணறுகளை தோண்டி ஒரு சுரங்க நீரடி   சுரப்பு  ஊற்றமைப்பினை-(INFILTRATION GALLERY) - நீர் கிணறு களை  கேப்டன் பேகர் எனும் கும்பினி பொறியாளர் அமைத்தார் . 
  அவற்றில்   மூன்றுகிணறுகள் செயல்ஆக்கதின்போது  தக்க நீர் சுரப்பினை வழங்காமையால் 
ஏழு கிணறுகளை பயனுக்கு  வைத்து  நீரினை இரும்பு  குழாய்கள் மூலம்  கும்பினியர்கள் 
வாழும் வெள்ளை பட்டினத்தின் பயனுக்கு PICCOTHA       எனும் ஏற்றங்கள் மூலம் நீர் இறைத்து தண்ணீர் வசதி பெற்றனர். 
தாங்கள் ஆரோக்கியமாக பெறும்  நீர் வசதி யினை மூன்றில்   இரண்டு   பகுதி வெள்ளை பட்டினத்திற்கும் எஞ்சிய  ஒரு பகுதியினை சுதேச மக்களுக்கும் வழங்கினர்.
                          அன்றைய மதரசா பட்டினத்தின்  ஏழு கிணறுகள் இன்றும் சென்னையில் வள்ளலார் நகர் பஸ் நிலையம் அருகே மின்ட் ஸ்ட்ரீட் ல் உள்ளது.
    பொறியாளர்   கேப்டன் பேகர் நினைவாக அவரது பேரினை மெட்ராஸ் முனிசிபல் கார்போரசன்மெட்ராஸ்உயர் நீதி மன்றம் அருகில் பிரட்வே பகுதியில் ராமகிருஷ்ண ஸ்வீட் கடை பக்கத்தில் ஒரு தெருவுக்கு வைத்துள்ளனர்.
  நீரின்றி அமையாது உலகு எனும் வாக்கினில்  இயற்கை நியதி படி உலக மக்களின் - மெட்ராஸ பட்டின -சென்னை மக்களின் -   தடையற்ற இயக்கத்திற்கு நீர் சேவையினை வழங்கும் குடி நீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் உன்னத   பணி புரிந்தவர்களுக்கும் /பணியாளர்களுக்கும் /பணி புரிய வர உள்ளவர்களுக்கும் இந்த மெட்ராஸ பட்டினத்தின்  நீர் வழங்கல் பற்றிய பதிவுகளை எழுதுகிறேன்.
                           மாமழை  போற்றுதும் , மாமழை போற்றுதும்
                           என வான் சிறப்பினை போற்றி உழைப்பவர்களுக்கு 
                           சமர்ப்பணம் . 
                     ஏழு கிணறு பற்றிய ஆதாரம் :
                WWW . GOOGLE . COM / புக் தேடல் -
                             the ways and works in india 

நன்றி : புகை படங்கள் உதவி : கூகுள் கடவுளின் வலை பக்கங்கள்  

          

















































     









      
























































































Friday, February 12, 2010

"சென்னையின் குடிதண்ணீர் பகிர்மானம்"


                         நீர் - WATER

                        "நீர் இன்றி அமையாது உலகு" என்பது வள்ளுவ வாக்கு

          இயற்க்கைஆதாரங்கள் ஆன  நிலம் ,நீர்,நெருப்பு ,காற்றுமற்றும் வான் எனும் ஐந்து கரு பொருட்களும்   
 அகிலத்தில் அனைத்து உயிர் வாழ் இனங்களுக்கும் இன்றி அமையதுவன.
        
நீர் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பினும்

           நீர் - என்பது  நீரக வாயு  எனும் - hydragen -  மற்றும்              பிராணவாயு எனும்-          Oxygen   - மூல பொருள்களின் வேதிகலப்பில் உருவாகும் ஓர் உன்னதமான   வாழ்நிலைஆதார அமிர்தம் ஆகும்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் எனும் முதுமொழி படி புகழத்தக்க ஒரு பொன்னான மூல கலப்பு பொருள்.  
     
               நீர்  - WATER       
                      பேச்சு   தமிழில்   
                        குடிநீர்                       -DRINKING WATER 
                        மழை நீர்                  -RAIN WATER
                        கடல் நீர்                     -SEA WATER 
                        ஏரி நீர்                        - lake water       
                        ஆற்று நீர்              - RIVER WATER
                         ஊற்று நீர்              - SPRING WATER
                         நிலநீர்                     - GROUND WATER
                         கிணற்று நீர்           - WELL WATER
                        ஊற்று சுனை நீர் - ARTESIAN WATER
                         தண்ணீர்                  -   COLD WATER
                         சுடுநீர்                      -   HOT WATER
                        மென்னீர்                 -    SOFT WATER
                        கடின நீர்                  -  HARD WATER
                         கன நீர்                     -  HEAVY WATER
                       முழுமையான நீர்       -WHOLESOME WATER
                        காய்ச்சி வடித்த நீர்      -   DISTILLED WATER
                         தாது  நீர்                        -     MINERAL WATER
                         கழிவு நீர்                           -WASTE WATER
                         கலங்கல் நீர்                -    POLLUTED WATER 
     என பல வகையில் பேச  பட்டாலும்  
    உலகத்தில் உள்ள  எல்லா உயிர் இனங்களுக்கும் தினசரி தேவை படும்  உன்னத          திரவம் .  
உலகில்  நீர் ஆதாரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அளவிடப்படும் மறு சூழற்சி எனும் நீர் சூழற்சி -HYDROLOGICAL CYCLE - மூலம் பெறப்படும்   அளவிடபடகூடிய  இயற்க்கை ஆதாரம் (FINITE NATURAL SOURCE).
   நீர்  , நீர் பற்றா குறை  , நீர் சேமிப்பு , நீர் வளம் மேம்படுத்தல் மற்றும் நீர் பகிர்தல்   குறித்து  உலகம் தழுவிய பல் வேறு கேள்விகள் , விடைகள் அனைத்து நாட்டு மக்களிடமும் இருந்து வருகிறது .
நீர் குறித்து உலக மக்கள் விழிப்படைய , நீர் சேமிக்க , நீர் பயன் அனைவரும் பெற , மற்றும்  எப்பொழுதும் எல்லா காலங்களிலும் தொடர்ந்து பெற (SUSTAINABLE DEVELOPMENT)       
அளவிடகூடிய இயற்க்கை நீர் ஆதாரம் (FINITE NATURAL SOURCE)  
நமக்கும் , நம் மானிட சந்ததியினர்  அனைவரும் பெற வேண்டி         உலக    நீர் நாள் -WORLD WATER DAY - ஆண்டு தோறும் மார்ச் மாதம்   22  ஆம்  நாள் கடை பிடிக்க படுகிறது .









                




   
          


            




Tuesday, February 2, 2010

thanneer

சென்னையின் தண்ணீர் வரலாற்று கதை என்பது
madarasan kuppam ? ! -16/17 th centuary


madaras pattnam -17/18/19 centuary

madras early19/20 century

chennai late 20/21 century..

...>>.> greater cheenai ...........>>>





* the growth of chennai historically/geographically/population wise/culturally/globally a phenomena.

* chennai is presently and futurely is going to face the basic essential problems in the below

mentioned essential services of human inhabitants.

* water supply and sewer disposal,power supply, roads,solid waste disposal, good ambience variety of environmentals.

to overcome the above problems, a sustainable process of solving tools actions are imperitive is the day of the need by all the habitats of chennai.